சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் கடைசி இடம் பிடித்த இந்தியா - ஆய்வு முடிவுகள்

By செய்திப்பிரிவு

டெல்லி: உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (2022), இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மொத்தம் 11 பிரச்னைகளை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை ஆய்வு எடுக்கப்பட்டது.

அதன்படி இதில் முதல் இடம், டென்மார்க் பிடித்துள்ளது. டென்மார்க் 77.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் 43வது இடமும், இந்தியா கடைசி இடமான 180வது இடமும் பெற்றுள்ளது. இந்தியா பெற்ற மதிப்பெண்கள், 18.9 மதிப்பெண்கள் ஆகும். இந்தியா பின் தங்கியதற்கான காரணமாக சொல்லப்படுவது, மோசமான காற்று மாசு, விரைவாக அதிகரிக்கும் பசுமை இல்ல வாயு ஆகியவை. இந்த காரணங்களால் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல, மற்றொரு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனாவும், ரஷ்யாவும் பின்தங்கிய இடங்களையே பிடித்துள்ளது. இந்த ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு விஷயம், இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளும் இதே நிலையில் சுற்றுச்சூழலில் பின்தங்கினால் வரும் 2050ம் ஆண்டுக்குள் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் 50 சதவீதத்துக்கும் அதிகம் அந்நாடுகளே கொண்டிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 mins ago

வாழ்வியல்

17 mins ago

ஜோதிடம்

43 mins ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

47 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்