விவாதக்களம்: மோடி அரசின் 2 ஆண்டு கால ஆட்சியின் சாதகங்களும் பாதகங்களும்

By செய்திப்பிரிவு

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று, இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

மத்திய அரசின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை நாடு முழுவதும் விளக்க பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (மே 26) முதல் ஜூன் 15-ம் தேதி வரை ‘விகாஸ் பர்வ்’ என்ற 21 நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு மத்திய அமைச்சர், மத்திய இணையமைச்சர் இடம்பெற்ற 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தனித்தனியாக பிரிந்து நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 முக்கிய மையங்களுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கவுள்ளனர்.

இது குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், ‘‘நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறை வேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருவதையும், குறுகிய காலத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு ‘டிவி’க்கள் மூலமாகவும் சாதனைகளை விளக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சியாலும் செயல்பாடுகளாலும் பல தரப்பு மக்களுக்கும் விளைந்துள்ள சாதகங்கள் - பாதகங்கள் குறித்து கீழே கருத்துப் பகுதியில் உங்கள் பார்வையை பதிவு செய்து விவாதிக்க வாருங்கள்.

அத்துடன் அடுத்தடுத்த ஆண்டுகளில் கவனம் செலுத்தவேண்டிய செயல்பாடுகள் குறித்தும் உங்களது எதிர்பார்ப்புகளை பதிவுசெய்யலாமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

43 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்