லஞ்ச வழக்கில் சிக்கிய மத்திய உள்துறை அதிகாரி ஆனந்த் ஜோஷியை காணவில்லை

By ஏஎன்ஐ

லஞ்ச வழக்கில் சிபிஐ விசா ரணையை எதிர்நோக்கியிருந்த மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் ஆனந்த் ஜோஷியை நேற்று காணவில்லை.

மத்திய உள்துறை அமைச்ச கத்தில் வெளிநாட்டுப் பயணி களுக்கான பிரிவில் ஆனந்த் ஜோஷி பணியாற்றி வந்தார். வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டம் (எப்.சி.ஆர்.ஏ) தொடர்பாக கோப்பு களை அவர் கையாண்டு வந்தார்.

இந்நிலையில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க அவர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆனந்த் ஜோஷியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் கடந்த திங்கள்கிழமை சிபிஐ சோதனை நடத்தியது. இதில் ரூ.7.5 லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆனந்த் ஜோஷி மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனந்த் ஜோஷியிடம் சிபிஐ புதன்கிழமை (நேற்று) விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை ஆனந்த் ஜோஷியை காணவில்லை. மனைவிக்கு அவர் எழுதியிருந்த கடிதம் வீட்டில் இருந்தது. அதில், “நான் வீட்டை விட்டுச் செல்கிறேன். என்னை தேடவேண்டாம். எனது தேசப்பற்றே எனக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிவிட்டது. எனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்