நேரடி மானியத்தால் ரூ.27,000 கோடி சேமிப்பு: பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் நேரடி மானியத் திட்டங்களால் ரூ.27 ஆயிரம் கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் தொடர் பாக டெல்லியில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி, பெட்ரோலிய துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நேரடி மானியத் திட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 30 கோடி பயனாளிகளுக்கு ரூ.61,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.25,000 கோடியும் சமையல் காஸ் நேரடி மானியத் திட்டத்தில் ரூ.21,000 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை காரணமாக நாடு முழுவதும் ஒரு கோடியே 60 லட்சம் போலி ரேஷன் அடையாள அட்டைகள் ரத்து செய் யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.10,000 கோடி சேமிக்கப்பட்டுள் ளது. இதேபோல சமையல் காஸ் நேரடி மானியத் திட்டத்தால் 3.5 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ள னர். இதன்மூலம் ரூ.14,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 3,000 கோடி மிச்சமாகி உள்ளது.

மத்திய அரசின் நேரடி மானியத் திட்டங்களால் ஒட்டுமொத்தமாக ரூ.27,000 கோடி சேமிக்கப்பட் டுள்ளது என்று கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, தகுதியுள்ள பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது, எனவே நேரடி மானியத் திட்டங்களை அதிக பட்ச கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களை யும் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார்.

ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங் களையும் ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 71 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர ஏராளமான போலி தொண்டு அமைப்புகளும் இயங்குவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படு கின்றன. எனவே ஆதார் அட்டை எண் போன்று தொண்டு நிறுவனங்களும் தனி அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்