காவல் நிலையம் மீது தாக்குதல்: கர்நாடகாவில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 கவுன்சிலர் உட்பட 148 பேர் கைது

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கடந்த 17-ம் தேதி முஸ்லிம்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்கள் பரவின.

இதனை பரப்பியதாக அபிஷேக் ஹிரேமத் (27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் பழைய ஹூப்ளி காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவலர்களின் வாகனங்கள், அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 12 போலீஸார் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய தடியடியில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கர்நாடக தலைவர் தாதாபீர் பெட்கேரி, ஹூப்ளி மாநகராட்சியை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கவுன்சிலர்கள் நசீர் அகமது, முகமது ஆரிப், கவுன்சிலர் ஹுஸைனியின் கணவர் இர்பான் நாவட்லாட் மதகுரு வசீம் பதான் உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸார் விசாரணை

கைது செய்யப்பட்டவர்கள் ஹூப்ளி, தார்வாட், பெல் லாரிமற்றும் குல்பர்கா ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் சிலரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

ஆன்மிகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்