தீவிரவாதிகள் தாக்குதல்: மணிப்பூரில் 6 வீரர்கள் பலி

By பிடிஐ

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அசாம் ஆயுதப்படை அதிகாரி மற்றும் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ளது சந்தேல் மாவட்டம். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அசாம் ஆயுதப்படை வீரர்கள் ஆய்வு செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் ஜோபை ஹெங்ஷி என்ற இடத்தின் அருகே வீரர்களின் வாகனம் வந்தபோது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ஆயுதப்படை அதிகாரி ஒருவரும், 5 வீரர்களும் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு, தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பகுதியில் நாகா தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில் மறைந்திருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் அசாம் ஆயுதப்படை தலைமை இயக்குநரை தொடர்புகொண்டு தீவிரவாதிகளை பிடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

க்ரைம்

31 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

39 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்