கொல்லம் விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள முதல்வர் வலியுறுத்தல்

By பிடிஐ

கொல்லம் விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10-ம் தேதியன்று கொல்லம் மாவட்டம் புட்டிங்காலில் உள்ள கோயிலில் நடந்த பட்டாசு போட்டியின்போது ஏற்பட்ட விபத்தின்போது 113 பேர் பலியாகினர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, "கொல்லம் விபத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். காலதாமதமின்றி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

கோயில்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படும். பாரம்பரிய முறையை கைவிடக் கூடாது என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் பரவூர் சம்பவம் போன்று மற்றுமொரு சம்பவம் இனிமேல் நடக்கவே கூடாது என வலியுறுத்துகின்றனர். இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்து அரசு முடிவு எடுக்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

45 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்