முடிந்தது 5 மாநில தேர்தல்: வெல்லப்போவது யார்? - இன்று மாலை ‘எக்ஸிட் போல்’

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கான 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்து முடிந்தது. உ.பி. மட்டுமின்றி 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது.

7-வது கட்டம் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. அசம்கார், மாவ், ஜான்பூர், காஜிப்பூர், சண்டாலி, வாரணாசி, மிர்சாபூர், பதோகி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 613 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 10-ந்தேதி எண்ணப்படுகின்றன. உத்தர பிரதேசம் மட்டுமின்றி உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகளும் 10-ம் தேதியே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே இந்த தேர்தலையொட்டி பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று இரவு வெளியாகவுள்ளது. கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் எடுத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

கல்வி

37 mins ago

தமிழகம்

49 mins ago

கல்வி

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்