'இதுவே இறுதி அழைப்பு; நேரில் ஆஜராகுங்கள்' - ரவீந்திர ஜடேஜா மனைவிக்கு நீதிமன்றம் சம்மன்

By செய்திப்பிரிவு

ஜாம்நகர்: காவலர் தாக்கிய வழக்கில் ஜாம்நகர் நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவரின் மனைவி ரிவாபா. சில வருடங்கள் முன் பாஜகவில் இணைந்த இவர் அரசியலில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் ரிவாபா தனது தாயுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் கார் முன்னாள் சென்றுகொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர், ஜாம்நகரில் உள்ள வித்யாசாகர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் ப்ரீத்தி சர்மா என்பது தெரியவந்தது.

அவருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டது. இதையடுத்து பிரீத்தி சர்மாவை ரிவாபா மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த விபத்தினபோது போலீஸ் கான்ஸ்டபிள், ஜடேஜா மனைவி ரிவாபாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரிவாபா, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியுடன் அந்த போலீஸ் மீது வழக்கு தொடுத்தார். ஜாம்நகர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும், ரிவாபா மற்றும் அவரின் தயார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

ராஜ்கோட் காவல்துறை சார்பிலும் சம்மன் அனுப்பப்பட்டு ரிவாபா தரப்பு ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "ரிவாபா மற்றும் அவரது தாயாருக்கு இதுவே இறுதி சம்மன். நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்யுங்கள்" என்று ஜாம்நகர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்