பஞ்சாப் மாநிலத்தை காப்பாற்ற பேரவை தேர்தலில் போட்டி: விவசாயிகள் அமைப்பு கருத்து

By செய்திப்பிரிவு

சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து சம்யுக்த சமாஜ் மோர்ச்சா என்ற பெயரில் கடந்த மாதம் அரசியல் கட்சி தொடங்கின.

இக்கட்சிக்கு பல்பீர் சிங் ராஜே வால் (80) என்பவர் தலைமை தாங்குகிறார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் தேர்தலில் சம்யுக்த சமாஜ் மோர்ச்சா போட்டியிடுகிறது. இதுகுறித்து பல்பீர் சிங் கூறியதாவது:

பஞ்சாபை காப்பாற்றவும் இங்குள்ள அமைப்பை மேம் படுத்தவுமே நாங்கள் இங்கு போட்டியிடுகிறோம். பஞ்சாபில் நிலைமை மோசமாகி வருகிறது. இளைஞர்கள் நம்பிக்கை இழந் துள்ளனர். வேலையில்லா திண் டாட்டம் காரணமாக அவர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். வேலை வாய்ப்புகள் இல்லா விட்டால் இங்கு குற்றங்கள் அதிகரிக்கும்.

பாரம்பரிய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள், தேர்தலில் போட்டியிடுமாறு எங்களிடம் வலியுறுத்தினர். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் இருந்துஅரசியல் வாதிகள் விலகியுள்ளனர். இதனால் சாமானிய மக்கள் சிரமப்படுகின்றனர். அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட அசுத்தத்தை நாங்கள் அகற்ற வேண்டும் என மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது.

பஞ்சாப் தேர்தலில் அனைத்து (117) இடங்களிலும் நாங்கள் போட்டிட உள்ளோம். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி எம்.பி. பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். மதுபானம் இல்லாமல் அவரால் இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அக்கட்சிக்கு தெரியவில்லை.

இவ்வாறு பல்பீர் சிங் ராஜேவால் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்