பி.எஸ்.எல்.வி. சி-23 கவுண்ட்டவுன் தொடங்கியது

By செய்திப்பிரிவு

பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்டுக்கான 49 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (சனிக்கிழமை) காலை 8.52 மணிக்கு தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட் 30-ம் தேதி திங்கள்கிழமை காலை சரியாக 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

ராக்கெட்டை ஏவுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, கவுண்ட்டவுன் திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நேரில் பார்வை:

பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 என்ற பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் உடன் சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி ஆகிய வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியிலிருந்து சென்னை வழியாக ஸ்ரீஹரிகோட்டா வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

10 mins ago

கல்வி

24 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

52 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்