அச்சுதானந்தனுக்கு சாண்டி 2 நாள் கெடு

By செய்திப்பிரிவு

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 16-ம் தேதி நடைபெறு கிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜன நாயக முன்னணி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இதில் ஆளும் காங்கிரஸுக் கும் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்டுக் கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வரு மான அச்சுதானந்தன் அண்மையில் கூறியபோது, முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் 31 வழக்குகளும் அவரது அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள 18 அமைச்சர்களுக்கு எதிராக 136 ஊழல் வழக்குகளும் உள்ளன என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு முதல்வர் உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். கோழிக்கோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அச்சுதானந்தன் பொய் களை பரப்பி வருகிறார். எனக்கு எதிராகவும் எனது அரசின் அமைச்சர்களுக்கும் எதிராகவும் வழக்குகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வழக்குகளின் எப்.ஐ.ஆர். நகல் களை அச்சுதானந்தன் வெளியிட வேண்டும்.

அவர் கூறிவரும் அவதூறு குற்றச்சாட்டுகளை உடனடியாக வாபஸ் பெற்று மன்னிப்பு கோரா விட்டால் சட்டபூர்வமாக நட வடிக்கை எடுக்கப்படும். இன்னும் 2 நாட்கள் அவருக்கு கெடு விதிக்கி றேன். அதற்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தேர்தல் ஆணை யத்திடம் முறைப்படி புகார் அளிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்