நிர்பயா நிதியின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?- ஸ்மிருதி இரானி விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிர்பயா நிதியின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

நிர்பயா நிதியின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிர்பயா நிதியின் கீழ் 2018-19-ம் ஆண்டு ரூ. 550 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ. 555 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ. 1355.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் ‘ஸேஃப் சிட்டி ப்ரபோஸல்’ எனும் பாதுகாப்பான நகரங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிஎன்ஏ ஆய்வு, சைபர் தடயவியல் மற்றும் இவை தொடர்பான வசதிகள் நிறுவப்பட்டு வருகின்றன.

நிர்பயா நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ 317.75 கோடி வழங்கப்பட்டு, ரூ 296.62 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ 15.11 கோடி வழங்கப்பட்டு, ரூ 9.5 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்