போர் விமான பெண் விமானிகளுக்கு தாய்மை அடைவதை 4 ஆண்டு தள்ளிப் போட அறிவுறுத்தல்

By பிடிஐ

போர் விமானத்தில் பணியாற்ற தெரிவான மூன்று பெண் விமானிகள் அடுத்த நான்கு ஆண்டுகள் வரை தாய்மை அடைவதை தள்ளிப் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் ஏராளமான பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றனர். எனினும் பெண்களை போர் விமானத்தில் பணியாற்றுவதற்கு கடந்த 2015 அக்டோபரில் தான் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து போர் விமானத் தில் பணியாற்றுவதற்கான தேர்வில் ஆறு பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அவர்களில் இறுதியாக பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய 3 பேர் மட்டும் தெரிவு செய்யப்பட்டு, வரும் ஜூன் 18-ம் தேதி போர் விமானத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

ஏற்கெனவே முதல்கட்ட பயிற்சிகள் முடிந்த அந்த 3 பேருக்கும் அடுத்த ஓராண்டுக்கு விசேஷ பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மேலும் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பயிற்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால், அந்த மூன்று பெண் விமானிகளும் தாய்மை அடைவதை தள்ளிப் போட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தாய்மை அடைந்த பெண்களால் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், இந்த அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

59 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்