உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல்: 37-ம் இடத்தில் நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 3-ம் ஆண்டாக இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, 18-வது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில்சிஇஓ-க்கள், நிறுவனத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நன்கொடையாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து 3-வது ஆண்டாக..

இந்தப் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார். 2019-ல் 34-வது இடத்தையும், 2020-ல் 41-வது இடத்தையும் அவர் பிடித்திருந்தார்.

மேலும் 3 இந்திய பெண்கள்இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ரோஷ்னி நாடார் (52), பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா (72), நைகா நிறுவனத்தின் சிஇஓ ஃபால்குனி நாயர் (88) ஆகியோர் உள்ளனர்.

இப்பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2-வது இடத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும், 3-வது இடத்தை ஈரோப்பியன் சென்டிரல் வங்கித் தலைவர் கிறிஸ்டின் லகார்டேவும், 4-வது இடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியான மேரி பர்ராவும், 5-வது இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மனைவியான மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸும் பிடித்துள்ளனர்.

மேலும் இப்பட்டியலில் இருக்கும் பெண்களின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் வணிகம், நிதி, ஊடகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்