நாட்டிலேயே முதல் முறையாக கடும் போராட்டத்துக்குப் பிறகு: ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்டிபல்லி சிவபால். 42 வயதான இவரது உயரம் சுமார் 3 அடி. கடந்த 2004-ல் பட்டப்படிப்பை முடித்தார். இதன்மூலம் மாவட்டத்தின் முதல் மாற்றுத்திறனாளி பட்டதாரி என்றபெருமையுடன் குள்ள மனிதர்களில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சிவபால் கூறிய தாவது: உயரம் குறைவாக இருப்பதால் என்னை பலர் கிண்டல் செய்தார்கள். சொந்தமாக கார் வாங்க விரும்பினேன். இது தொடர்பாக இணையதளத்தில் தேடிய போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீடியோவை பார்த்தேன். அதில் குள்ளமானவர்களுக்காக காரில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து விளக்கி இருந்தார். இதையடுத்து, கார் வாங்கி மாற்றங்களை செய்தேன்.

பின்னர் என் நண்பர் மூலம் ஓட்டுநர் பயிற்சி பெற்றேன். எனினும், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர் முயற்சியால், என்னை முறையாக சோதித்து ஓட்டுநர் உரிமம் வழங்கினர். தற்போது உயரம் குறைவாக உள்ள பலர் ஓட்டுநர் பயிற்சி வழங்குமாறு என்னை கேட்கின்றனர். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்காக அடுத்த ஆண்டு ஓட்டுநர் பயிற்சி மையம் திறக்க உள்ளேன். இவ்வாறு சிவபால் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்