நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையா இந்தியா வரும்வரை காத்திருக்கப் போவதில்லை: ஜனவரி 22-ல் தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும்வரை அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க காத்திருக்கப் போவதில்லை எனஉச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. அதில் டியாகோபிஎல்சி நிறுவனத்திடமிருந்து பெற்ற 4 கோடி டாலரை தனது வாரிசுக்கு விஜய் மல்லையா மாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக கடன் அளித்த வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தது.

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய் மல்லையாவுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே, இது தொடர்பாக கடந்த ஆண்டு விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.ஜனவரி 22-ம் தேதி இந்த வழக்கின்இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் இதற்கான தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

2017-ம் ஆண்டிலிருந்து இந்தவழக்கு நடைபெற்று வருகிறது.நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது. இதன் இறுதிக்கட்ட விசாரணை ஜன.22-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் விஜய்மல்லையாவோ அல்லது அவரதுவழக்கறிஞரோ நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் பதிவு செய்யப்பட்டது. இந்தியாவுக்கு வராமல் தப்பிப்பதற்கு அவர்மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

39 mins ago

க்ரைம்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்