பெண் குழந்தை பெற்றதால் செல்போனில் முத்தலாக் கூறிய கணவர் மீது போலீஸார் வழக்கு

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேசம் இந்தூர் அருகே எம்ஐஜி பகுதியைச் சேர்ந்த ஆசிரியை அலினா கான். இவரது கணவர் ஆஸ் முகமது கான். இவர்களுக்கு 2009-ல் திருமணமானது. இவர்களுக்கு 2014-ல் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பெறாததால் அலினாவை ஆஸ் முகமதும் அவரது சகோதரர்களும் கொடுமைப்படுத்தி, ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

ஆஸ் முகமதுக்கு போதைப் பழக்கமும் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஆஸ் முகமதுவின் கொடுமை தொடர்ந்துள்ளது. தொடர்ந்து அலினா கானை ஆஸ் முகமது கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், பெண் குழந்தை பெற்றதாகவும் ஆண் குழந்தை பெறவில்லை என்று கூறி லினா கானை விவகாரத்து செய்வதாக செல்போனிலேயே ஆஸ் முகமது முத்தலாக் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸாரிடம் அலினா கான் அளித்த புகாரின் பேரில் ஆஸ் முகமது மீது முத்தலாக் தடை சட்டம், வரதட்சணைக் கொடுமை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆஸ் முகமதுவை கைது செய்வதற் கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்