தன்பாலின உறவாளர்களுக்கு திருமண இணையதளம்: வெளிநாடு வாழ் இந்தியர் தொடங்கினார்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் மருத்துவ சுற்றுலா துறையில் பணிபுரிபவர் பென்ஹுர் சாம்சன். தன்பாலின உறவாளர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு உதவி வருகிறார். அவர், தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்காக இந்தியாவில் தங்களின் துணையை தேர்ந்தெடுப்பதற்காக இணையதளம் தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “வழக்கமான திருமணங் களுக்காக அமெரிக்காவில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியா வரு கின்றனர். கடந்த ஜூன் மாதம் திருமண சம உரிமை சட்டத்தை அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார். அப்போதுதான், தன்பாலின உற வாளர்கள் இந்தியாவில் தங்களின் துணையைத் தேர்ந்தெடுக்க ஏன் உதவக் கூடாது எனத் தோன்றியது. எங்களுடைய தளம், வெவ்வேறு பகுதியிலுள்ள தன்பாலின உற வாளர்கள் துணையைத் தேர்வு செய்ய உதவுகிறது. இதுவரை 250 தன்பாலின உறவாளர்கள் பெரும் பாலும் இந்தியர்கள் எங்களது நிறுவனத்தை அணுகியுள்ளனர். எங்களது இணையதளம் மூலம் இதுவரை 29 பேர் திருமணம் செய்து கொள்ள உதவியுள்ளோம்.

இந்த தளத்தில் பதிவு செய்ய 5,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3.3 லட்சம்) கட்டணம் வசூலிக்கப் படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு துணையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.

தன்பாலின உறவாளர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி என்னிடம் வருபவர்கள், குழந்தைக் காக இந்தியா வருகின்றனர். இங்கு, தங்களின் துணையைத் தேர்வு செய்து இணைந்து வாழ்கின்றனர். அதைப்பார்த்துதான் இந்த யோசனை தோன்றியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்