7 பேர் விடுதலை: மத்திய அரசு பதில் அளிக்க திமுக கோரிக்கை

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவை யில் பூஜ்ஜிய நேரத்தின்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்னர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435-வது பிரிவு மத்திய அரசை கலந்து ஆலோசித்த பிறகே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இதன் அடிப்படையில், தமிழக அரசு மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து உடனடியாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்