நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக தேவையற்ற பீதி உருவாக்கப்படுகிறது: மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம்

By செய்திப்பிரிவு

மின் உற்பத்தி குறித்து நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 6 மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோ கம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று கூறியதாவது:

மத்திய அரசிடம் போதுமான அளவில் மின்சாரம் உள்ளது. நாங்கள் முழு நாட்டுக்கும் மின்சாரம் வழங்கி வருகிறோம். யார் வேண்டுமானாலும், எனக்கு ஒரு கோரிக்கையை கொடுங்கள்.

நான் அவர்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவேன். நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக தேவையற்ற பீதி உருவாக்கப் பட்டுள்ளது.

நாட்டில் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. டெல்லி உட்பட எந்த மாநிலத்திலும் மின்தடை இருக்காது. உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் அதன் விநியோகம் தொடரும்.

எந்த சூழ்நிலையிலும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படாது. டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல் படுத்தப்பட்டுள்ளது.விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக கெயில் இந்திய நிறுவனத் அதிகாரிகள் சப்ளையர்களுக்கு அளித்த தவறான தகவலால் பீதி உருவானது.

நமது தேவைக்கு ஏற்றார் போல நிலக்கரி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக் குறை ஏற்படாது. அனைத்து மாநிலங் களுக்கும் மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது.

வழக்கமாக நவம்பர் முதல் ஜூன் மாதம் வரை 17 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பை நாம் வைத்திருப்போம். தற்போது 4 நாள் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் என்னிடம் பேசியிருக்கலாம். இவ்வாறு அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

41 mins ago

க்ரைம்

47 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்