மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்கும் உ.பி. ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடி கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் உத்தர பிரதேச ஆசிரியையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமரின் மனதின் குரல் வானொலி உரை நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. அப்போது உத்தர பிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

‘‘உத்தர பிரதேசத்தில் ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்ற உன்னத இயக்கத்தை பரேலியின் டபோரா கங்காபூர் பள்ளித் தலைமை ஆசிரியை தீப்மாலா பாண்டே தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் சேவையுள்ளத்தோடு கிராமந்தோறும் சென்று மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடி அலைகின்றனர். அவர்களை ஏதாவது ஓரு பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் தீப்மாலாவுக்கும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மனம் திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பிரதமர் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியை தீப்மாலா பாண்டே (38) கூறிய தாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் அன்மோல் என்ற செவித்திறன் குறைந்த மாணவனை எங்கள் பள்ளியில் சேர்த்தேன். அந்த மாணவனின் கல்வி ஆர்வம் என்னை பிரம்மிக்கவைத்தது. அப் போதுமுதல் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக தன்னலமின்றி சேவையாற்றி வருகிறேன்.

கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை கண்டறிந்து அவர்களை பள்ளி களில் சேர்த்து வருகிறேன். என்னுடைய சேவையை பார்த்து மாநிலம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் என் னோடு இணைந்துள்ளனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளி களில் சேர்த்துள்ளோம்.

கரோனா ஊரடங்கின்போது எங்கள் இயக்கத்துக்கு ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்று பெயர் சூட்டினோம். என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்கள் மாதம்ஒருமுறை ஒன்றுகூடி மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விதிட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறோம். அவர்களுக்காக ஆன்லைன்வகுப்புகளை நடத்துகிறோம்.கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

என்னையும் என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்களையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்