டிஆர்டிஓ ரகசியங்களை உளவு பார்க்க துபாயிலிருந்து வந்த பணம்: ஒடிசா போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ரகசியங்களை உளவுபார்க்க துபாயிலிருந்து பணம்பெறப்பட்டுள்ளது என்று ஒடிசாபோலீஸார் நடத்திய விசாரணை யில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் டிஆர்டிஓ அமைப்பின் வளாகங்கள் அமைந்துள்ளன. ஒடிசாவின் பாலசோர்பகுதியில் டிஆர்டிஓ அமைப்பின்மிகப்பெரிய வளாகம் அமைந்துள்ளது. இங்குதான் பிரம்மோஸ், அக்னி உள்ளிட்ட ஏவுகணைகள்சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டிஆர்டிஓ ரகசியங்களை உளவு பார்த்து வந்து சொல்லுமாறு டிஆர்டிஓ-வில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த 5 பேரிடம் பாகிஸ்தான் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்காக அந்த 5 பேரில் ஒருவருக்கு துபாயிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.38 ஆயிரத்தை துபாயிலிருந்து செயல்படும் வங்கி மூலம் 5 பேரில் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது ஒடிசா குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்ச 5 பேரையும் பாலசோர் போலீஸார் கடந்த 14-ம் தேதி கைது செய்துள்ளனர். டிஆர்டிஓ ரகசியங்களை உளவு பார்த்து வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு சொன்னதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒடிசா கூடுதல் டிஜிபி (குற்றப்பிரிவு) சஞ்சீப் பாண்டா கூறும்போது, “இந்த5 பேரும், வெளிநாட்டு பெண்ஏஜென்ட் ஒருவருக்கு ரகசியங் களைத் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அந்தப் பெண் இவர்களுக்கு அறிமுகமாகி நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

விசாரணையில் அவர் பாகிஸ்தான் பெண்ணாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகப்படுகிறோம். அந்த பெண் பிரிட்டனைச் சேர்ந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

அந்த பெண் யார் என்பதை கண்டறியும் பணியில் உள்ளோம். டிஆர்டிஓ தயாரித்த ஆளில்லா உளவு வாகனம் உள்ளிட்ட பல்வேறுரகசியங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) சேர்ந்த 2 பேர் கொண்ட குழு ஒடிசாவுக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளது. விரைவில் அந்த பெண் யார் என்பதையும், அவர் எங்கிருந்து செயல்படுகிறார் என்பதையும் கண்டறிவோம்” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்