ஆங்கிலேயர் கால தவறை திருத்தும் மோடி: ஆங்கிலத்தில் ‘சம்ஸ்கிருத்’ என்று குறிப்பிட யூஜிசி முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

ஆங்கிலத்தில் சன்ஸ்கிருத் (Sanskrit) என்று அழைக்கப்படும் வார்த்தையை சம்ஸ்கிருத் (Samskrit) என திருத்தம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) முடிவு செய்துள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் நடந்த தவறை திருத்தும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முயற்சியாக கருதப்படுகிறது.

சமஸ்கிருதம், ஆங்கிலத் தில் ‘Sanskrit’ என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தையே உலகம் முழுதும் உள்ள கல்வி நிலையங்களில் கடந்த சுமார் 200 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் ஆங்கிலே யர் ஆட்சியில் குறிப்பிடப்பட்ட இந்த ஆங்கில வார்த்தையில் ‘N’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘M’ என்ற எழுத்து இடம்பெற்றிருக்க வேண் டும் என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டு வந்த இந்த வார்த்தையை மோடி, தான் பிரதமராக பதவியேற்ற பின் சரி செய்ய விரும்பியுள்ளார்.

எனவே இதை சரிசெய்ய உகந்த உயர்நிலைக் கல்வி அமைப் பான யூஜிசிக்கு அவர் உத்தர விட்டார். இதையடுத்து யூஜிசியின் தலைவர் வேத் பிரகாஷும் இடம்பெற்ற அதன் ஆலோசனைக் குழு கடந்த ஜனவரி 18-ல் கூடி ஆலோசனை செய்தது. இதில் மேற்கண்ட பிழையை நீக்கி, ‘Samskrit’ என அழைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை யூஜிசி ஒரு சுற்றறிக்கையாக சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கும் நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பிவைக்க உள்ளது.

இதுகுறித்து உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக, சமஸ் கிருத மொழி இணைப் பேராசிரியர் ஹிமான்ஷு ஆச்சார்யா ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘சம்ஸ்’ என் றால் சிறப்பானது, கலாச்சார மானது மற்றும் சுத்தமானது என்று பொருள். ‘கிருத்’ என்பது பழமை யான அல்லது பண்டைய என்றும் ‘தம்’ என்றால் திருத்தப்பட்டது என வும் பொருளாகும். சமஸ் கிருதத்தை அதன் பொருளுக்கு ஏற்றபடி ஆங்கிலத்தில் செய்யப் படும் திருத்தம் கண்டிப்பாக அனை வராலும் வரவேற்கக் கூடியது. இந்த திருத்தத்தை பல ஆண்டு களாக சமஸ்கிருத மொழி அறிஞர் கள் வலியுறுத்தி வந்தனர்” என்றார்.

சமஸ்கிருதத்தின் வளர்ச்சி குறித்து யூஜிசி கடந்த ஜனவரி 21-ல் ஓர் ஆங்கில சுற்றறிக்கையை நாட்டின் அனைத்து உயர் நிலை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியது. இதில் முதன் முறையாக ‘Samskrit’ என்று யூஜிசி யால் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் 126 பல்கலைக்கழகங் களில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப் படுகிறது. தமிழகத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், காஞ்சிபுரத்தில் சந்திரசேகரேந் திரா சரஸ்வதி விஷ்வ மஹா வித்யாலயா ஆகியவற்றிலும், புதுச்சேரி பல்கலைகழகத்திலும் இதற்கான படிப்பு உள்ளது. இனி, இவற்றின் விண்ணப்பங்களில் இத்திருத்தம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

வாழ்வியல்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்