மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமத்தில் சுவர்களை கரும்பலகையாக மாற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க மாநிலம் பசிம் பர்தமான் மாவட்டத்தில் பழங் குடியினர் வசிக்கும் ஜோபா அட்பாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் 34 வயதான தீப் நாராயண் நாயக். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாண வர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்க கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க முன்வந்தார்.

இதற்காக, கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே சிறிய அளவில் கருப்பு பெயின்ட்டால் கரும்பலகையை போல் ஏற்படுத்தியும் சாலை களையே வகுப்பறைகளாக மாற்றியும் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார். மாணவர்கள் அந்த கரும்பலகையில் எழுதியும் மைக்ராஸ்கோப் கருவிமூலமும் பாடங்களை ஆர்வமுடன் கற்கின்றனர்.

மாணவர்களுக்கு பாடங்கள், நர்சரி பாடல்கள் மற்றும் பொது அறிவு, கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவதன் அவசியம், கை கழுவுதல் போன்றவற்றை தீப் நாராயண் நாயக் கற்றுக் கொடுக்கிறார். பள்ளிகள் மூடப் பட்டதால் படிக்காமல் சுற்றித் திரிந்த எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார் என்று நன்றியுடன் கூறுகின்றனர் கிராம மக்கள். அந்த கிராமத்தில் தீப் நாராயண் நாயக்கை ‘தெருவோர ஆசிரியர்’ என்று அன்புடன் மக்கள் அழைக்கின்றனர்.

தீப் நாராயண் நாயக் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் மாடு மேய்க்க சென்றதை பார்த்து கவலையடைந்தேன்.அவர்களில் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். பள்ளியில் தொடரவில்லை என்றால் ஆர்வம் குறைந்து அவர்களின் படிப்பே நின்றுவிடும் என்பதால் அவர்களுக்கு சுவர்களை கரும்பலகையாக்கி சாலை களை வகுப்பறைகளாக்கி பாடம் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன். அவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதே எனது நோக்கம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்