பெண்ணை மானபங்கபடுத்திய வழக்கில் 32 நாட்களில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

மும்பையில் வங்கியில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், கடந்த மே 12-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு அலுவலகம் சென்றுள்ளார். அலுவலகத்துக்குள் நுழையும் போது 27 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழிமறித்து அவரை மானபங்கபடுத்தி உள்ளார். அந்தப் பெண் உதவி கேட்டு சத்தம் போட்ட போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில் யாரும் உதவ முன்வரவில்லை. பின்னர் சக ஊழியர் ஒருவர் வந்து அந்தப் பெண்ணை மீட்டுள்ளார். துன்புறுத்தியவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக எஸ்பிளனேடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரித்த நீதிபதி ஹேமந்த் யு ஜோஷி செப்டம்பர் 2-ம் தேதி (32 நாட்களில்) தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சக ஊழியர் முக்கிய சாட்சியாக இருந்தாலும் அவரை தனிப்பட்ட சாட்சியாக கருத முடியாது என கூற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவ ஒருவரும் முன்வராத நிலையில், வேறு ஒரு சாட்சியை தேடுவது விசாரணை அதிகாரிக்கு சவாலான விஷயம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்