சோலார் பேனல் வணிகத்தில் ஆர்வம் காட்டியதில்லை: உம்மன் சாண்டியின் மகன் தகவல்

By பிடிஐ

சோலார் பேனல் வணிகத்தில் நான் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் கூறியுள்ளார்.

சோலார் பேனல் ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு, இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான சரிதா எஸ் நாயர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர், “கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தனது மகன் சாண்டி உம்மன் மற்றும் குடும்பத்தினரையும் சேர்த்து கேரள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டுறவு சங்கம் தொடங்குமாறு என்னிடம் வற்புறுத்தினார். ஸ்டார் ஃப்ளேம்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பங்குதாரராக சாண்டி உம்மன் இருப்பதால், சோலார் பேனல் இறக்குமதி செய்ய இந்த நிறுவனத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று என்னிடம் கூறப்பட்டது” என்றார்.

இந்நிலையில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் தனது தனது முகநூல் பக்கத்தில், சோலார் பேனல் அல்லது அது தொடர்பான பிற வணிகத்தில் நான் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை என்பதை எனது நலம் விரும்பிகள் நன்கு அறிவார்கள். வாய்மையே எப்போதும் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்