ஏழுமலையான் கோயிலில் ‘ஸ்ரீவாரி தன பிரசாதம்’ திட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் நேர்த்தி கடனாக பக்தர்கள் ‘முடிப்பு’ செலுத்துவது ஐதீகம். அவற்றில் அதிகமாக சில்லறை நாணயங்கள் இருக்கும். தினமும் ரூ.20 லட்சம் வரை சில்லறை நாணையங்கள் வருகின்றன.

பக்தர்கள் காணிக்கை

அவற்றை ரூ.1, 2, 5 என தனித்தனியாக பிரித்து மூட்டை கட்டி, பத்திரமாக வைக்கின்றனர். இதனுடன் வெளிநாட்டு நாணயங்கள், கரன்சிகளும் பாதுகாக்கப்படும். இந்த ‘ஸ்ட்ராங் ரூம்’-இல் ஏழுமலையானுக்கு மன்னர்கள் காலம் முதல் தற்போது பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விலையுயர்ந்த நகைகளும் பாது காக்கப்படுகிறது.

ஆனால், சில்லறை நாணயங்களை கணக்கு போட்டு வாங்குவதற்கு நேரம் அதிகமாகும் என்பதால் எந்த வங்கியும் இதனை கணக்கில் வைக்க முன்வரவில்லை. இதனால், 1 ரூபாய் நாணயங்களை நூறு, நூறாக பாக்கெட்டில் அடைத்து, அதனை வாரி தன பிரசாதம் எனும் பெயரில் திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் விற்பனை செய்ய தொடங்கியது.

இவற்றை தங்கும் அறைகளுக்கு டெபாசிட் செய்த பக்தர்களுக்கு, அவர்கள் அறைகளை காலி செய்த பின்னர் டெபாசிட் பணத்தை திரும்ப கொடுக்கும் போது இந்த சில்லறை நாணயங்களை வழங்கிவருகிறது. இதனை வேண்டாமெனும் பக்தர்களுக்கு ரூபாய்நோட்டுகளையே தேவஸ்தானம் வழங்கி விடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்