திருமலையில் இயற்கை வேளாண் உணவு: திருப்பதி தேவஸ்தானம் வெள்ளோட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 2 மாதங்களாக இயற்கை வழியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களில் மட்டுமே நைவேத்தியங்கள் செய்யப்பட்டு படைக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று, பக்தர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில், திருமலையில் இயற்கை வேளாண் உணவுகளை வழங்க முடிவு செய்தது. அதன்படி, நேற்று முதல் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் ‘சாம்பிரதாய போஜனம்’ எனும் பெயரில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, மதியம் 14 வகையான உணவு, இரவு சிற்றுண்டி போன்றவை விநியோகம் செய்யப்பட்டது. சாப்பிட்ட அனைவரும் இந்த வகையான உணவு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் என கூறினர். இது வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்களுக்கு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதன்பின்னர், இவைகளை குறைந்த விலைக்கு பக்தர்களுக்கு கொடுக்கலாமா ? அல்லது இலவசமாக வழங்கலாமா ? என்பது குறித்து தேவஸ்தானம் அறிவிக்க உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்