ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

கரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில ்இருந்து தமிழகம், கர்நாடக மாநிலங் களுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆந்திராவில் இருந்து திருப்பதி, கடப்பா, சித்தூர், விஜயவாடா, பலமனேர், குப்பம், உள்ளிட்ட ஆந்திராவின் பல்வேறு நகரங்களில் இருந்து தமிழகத்தின் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகமும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகமும் பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளன.

கர்நாடகா பேருந்துகள்...

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாத‌த்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கடந்த ஏப்ரல் 27-‍ம் தேதி நிறுத்தப்பட்டது.

இதனால், கர்நாடகாவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் இருந்து தினமும் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வோர் தமிழக எல்லையான அத்திபள்ளி வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து நடந்து சென்று எல்லையை கடந்தனர்.

இதனால் கர்நாடகா - தமிழகம் இடையே மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது இரு மாநிலங்களிலும் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து 4 மாதங்களுக்கு பிறகு நேற்று கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பெங்களூருவில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை, திருக்கோவி லூர், வேலூர், சென்னை, கோயமுத்தூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக 250 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இரு மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

32 mins ago

வாழ்வியல்

37 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்