பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய அனுமதிக்கவும் உச்ச நீதிமன்றத்தில் கேரள பெண் வழக்கு

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த 10-வது படிக்கும் 16 வயது சிறுமியை, கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்கம்சேரி என்பவர் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் 2016-ல் நடந்தது.

பாதிரியார் மிரட்டியதால் இந்த சம்பவத்தை சிறுமி யாருக்கும் தெரிவிக்கவில்லை. ஒரு நாள் பள்ளியில் இருந்த போது சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

அப்போதுதான் பாதிரியார் ராபின், பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து ராபின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தலச்சேரி நீதிமன்றம், 2019-ல் பாதிரியாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த ராபினை, திருமணம் செய்ய அனுமதி கோரி அந்த பெண்தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து உச்ச நீதிமன் றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்வதற்காக ராபின், ஜாமீனில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்