பள்ளிகளில் 45 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: புள்ளிவிவரங்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் மையமானது (யுடிஐஎஸ்இபிளஸ்) ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர் கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களைப் பதிவு செய்து வைத்துள்ளது.

அதன்படி ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 45 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சே்ரந்தவர்கள், 19 சதவீதத்தினர் தலித் பிரிவை (எஸ்சி) சேர்ந்தவர்கள், 11 சதவீதம் பேர் பழங்குயினர் பிரிவை (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதர பிரிவினர் மற்றும் இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் 25 சதவீத அளவில் உள்ளனர்

தென் மாநிலங்களில் அதிக அளவில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். பள்ளியில் சேர்பவர்களில் தமிழ்நாட்டில் 71 சதவீதம் பேர் ஓபிசி பிரிவையும், கேரளாவில் 69 சதவீதத்தினரும், கர்நாடகாவில் 62 சதவீதத்தினரும் ஓபிசி பிரிவினர்களாக உள்ளனர். 1931-ம் ஆண்டு வரை இருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியாக எந்த வகுப்பினர் எத்தனை சதவீதம் பேர் இருந்தனர் என்ற விவரங்கள் இருந்தன.

அதற்குப் பின்னர் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டுமே கணக்கெடுக் கப் படுகின்றனர். மற்ற சாதியினர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை. ஆனால் 2016-ல் சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) நடத்தப்பட்டது. அதன் விவரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை.

2021-ல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரியாக கணக்கெடுப்பு நடை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 mins ago

இந்தியா

33 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

46 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்