ஆந்திராவில் போலி கோழிமுட்டை விற்பனையால் பொதுமக்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் போலி கோழி முட்டை விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.

நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்று முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஊருக்குள் வந்தது. அந்த வேனில் முட்டை டிரேக்களை ஏற்றிக்கொண்டு வந்த வியாபாரி, ஊர் முழுக்க சுற்றி, 30 முட்டைகள் ரூ.130க்கு விற்பனை செய்கிறேன் என கூறியதால், அந்த ஊரில் இருந்த பலர் முட்டைகளை டிரே கணக்கில் வாங்கினர். இதனால், ஒரே மணி நேரத்தில் அனைத்து முட்டைகளையும் விற்றுவிட்டு அந்த முட்டை வியாபாரி அந்த ஊரை விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், முட்டையை வாங்கியவர்களில் சிலர் அவரவர் வீடுகளில் முட்டையை சமைக்க தொடங்கினர். இதில் சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் முட்டை வேகாததால், சந்தேகம் அடைந்தனர். பின்னர் அந்த முட்டையை எடுத்து உடைத்து பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை. வெறும் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்துள்ளது. இதில் சிலர் ஆம்லெட் போடவும் முயற்சித்துள்ளனர். ஆனால் முட்டை உடையவில்லை. இதனால், அனைவரும் ஒருசேர முட்டை வியாபாரியால் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தது அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வரிகுண்டபாடு போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரி மீது கிராம மக்கள் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து, முட்டை வியாபாரியை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்