கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்த ஆடியோ வெளியானதால் பரபரப்பு: பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் மறுப்பு

By இரா.வினோத்

கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று நேற்று வெளி யானது. அதில், ‘முதல்வர் விரை வில் மாற்றப்படுவார். மூத்த தலை வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா ஆகியோர் இல்லாத குழு விரைவில் பொறுப்பேற்கும். டெல்லி மேலிடம், முதல்வர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை ப‌ரிசீலித்து வருகிறது. இதை தீர்மானிக்கும் இடத்தில் நான் தான் இருக்கிறேன்' என பதிவாகியுள்ளது. இந்த ஆடியோ கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நளின்குமார் கட்டீல் கூறுகையில், ‘‘அது என் குரல் இல்லை. எடியூரப்பா கர்நாடக பாஜகவின் தன்னிகரற்ற தலைவர். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வித்திட்டதே அவர்தான். தற்போதைய ஆட்சியின் இதயம் போன்றவர். எனவே முதல்வர் பதவியில் இருந்து அவரை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்