இந்தியாவில் ஐ.எஸ் வளர்ச்சியை தடுக்க முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது

By பிடிஐ

சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் இந்திய இளைஞர்களை கவர்ந்திழுப்பதை தடுப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர் களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் இருந்து இதுவரை 23 இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து இருப்பதாகவும், அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் சமீபத்தில் உளவுத் துறை எச்சரித் தது. மேலும் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ் தொடர்பில் இருப்பதால் அவர்களை உளவுத் துறை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய இளைஞர்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மூளைச் சலவை செய்வதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்ட மாக முஸ்லிம் மதத் தலைவர்களு டன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்கள், ஐ.எஸ் அமைப் பிடம் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்படுவதற்கான காரணிகள், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட் டது. ஐ.எஸ் உட்பட அனைத்து வகை யான தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு களும் மக்களும் அணிதிரள வேண் டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் தலைவர் கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வளர்ச்சியை தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கு வதாக உறுதி அளித்தனர்.

மேலும் சிறுபான்மையினருக் கான தேவையான நலத்திட்டங்கள், சமூக ஊடகங்களை கையாளும் முறை ஆகியவை குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஜமியாத் உலெமா இ ஹிந்து வின் மவுலானா அர்ஷத் மதானி, அஜ்மீர் தர்காவின் மூத்த மதத் தலைவர் மவுலானா அப்துல் வாஹித் ஹுஸேன், ஜமியாத் அஹ்லே ஹதீஸின் அஸ்கர் அலி இமாம் மெஹ்தி உட்பட முஸ்லிம் மதத் தலைவர்கள் சார்பில் பலர் பங்கேற்றனர். ஐ.எஸ் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்