மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை 1 முதல் 11% உயர்வு

By செய்திப்பிரிவு

மத்திய அரசு ஊழியர்களுக் கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த 11 சதவீத உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர் களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி (டிஏ) உயர்த்தி வழங்கப்படுகிறது. இதுபோல் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலை நிவாரணத் தொகை (டிஆர்) உயர்த்தப்படுகிறது

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த உயர்வு அறிவிக்கப்படும். இந்நிலை யில் எதிர்பாராத கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரை 3 தவணைகளுக்கு டிஏ, டிஆர் ஆகியவற்றை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

கரோனா தொற்றுக்காக பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும் போதிய நிதியாதாரம் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான முடிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ, டிஆர் ஆகியவற்றை ஜூலை 1, 2021 முதல் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அடிப்படை ஊதியம் அல் லது ஓய்வூதியத்தில் தற்போது 17 சதவீதமாக டிஏ மற்றும் டிஆர் உள்ளது. இது தற்போது 28 சதவீதமாக அதாவது 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த முடிவால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.34,400 கோடி செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 48 லட்சத்து 34,000 மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சத்து 26,000 ஓய் வூதியதாரர்கள் பலன் அடை வார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்