பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த பஞ்சாபில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கைது

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த தாக கூறி இரண்டு இந்திய ராணுவ வீரர்களை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானை ஒட்டி பஞ்சாப் மாநிலம் அமைந்திருப்பதால், அங்கு எல்லைத் தாண்டி போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாக இருந்தது. இதனைத் தடுக்க, மத்திய - மாநில அரசுகள்இணைந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக, தற்போது இதுபோன்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன. இருந்தபோதிலும், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்கள் பஞ்சாப் மாநிலத்திற்குள் கடத்திக் கொண்டு வரப்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இதனைக் கண்காணிக்கவும், தடுக்கவும் பஞ்சாப் காவல்துறையில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு எல்லைப் பகுதிகளில் பணியமர்த் தப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்ததாக கூறி, அமிர்தரசஸை சேர்ந்த ரன்வீர் சிங் என்பவரை போலீஸார் கடந்த மே மாதம் 24-ம் தேதி கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், ரன்வீர் சிங்கின் கூட்டாளியான கோபி என்பவர் ஜூன் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளியாகின. அதாவது, இவர்கள் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்களை பஞ்சாபுக்கு கடத்துவது மட்டு மல்லாமல், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்திய ராணுவத்தில் சிப்பாய் நிலையில் பணிபுரிந்து வரும் ஹர்ப்ரீத் சிங் (23), குர்பேஜ் சிங் (23) ஆகிய இருவரும்தான் ராணுவ ரகசியங்களை அவர் களுக்கு வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்காக, அவர்கள் லட்சக் கணக்கிலான பணத்தை கைமாறாக பெற்றிருக்கின்றனர். இந்த ராணுவ வீரர்கள் இருவரும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ராணுவ உயரதிகாரிகளுக்கு பஞ்சாப் போலீஸார் தகவல் அளித்தனர். இதன்பேரில், அவர்கள் இருவரும் போலீஸாரிடம் கடந்த 2-ம் தேதி ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை வரும் 11-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஜலந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவரை நடைபெற்ற விசாரணையில், 900-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை புகைப்பட மாக எடுத்து, அவற்றை ரன்வீர் சிங்குக்கு அனுப்பியதை அவர் கள் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தஆவணங்கள் யாவும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப் பிடம் ரன்வீர் சிங் வழங்கி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்