அயோத்தி வளர்ச்சி திட்டங்கள்: யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதை தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

அயோத்தி மீதான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த நவம்பர் 2019-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது.

கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அயோத்தி வருவதற்கு விமான மற்றும் ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டு வருகிறது.

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பணிகளுக்காக மாநில அரசு ஆயிரம் கோடி ரூபாயும், மத்திய அரசு 240 கோடி ரூபாயும் ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில், அயோத்தி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

44 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்