பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் நீடிப்பார்: காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. அவரது தலைமைக்கு முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட ஒரு பிரிவினர் அண்மைக்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிருன்றனர்.

சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு வழக்குகளில் நடவடிக்கை இல்லாதது, தலித் சமூகத்தினருக்கு அரசில் போதிய பிரதிநிதித்துவம் வழங்காதது, முதல்வரை எளிதில் அணுக முடியாதது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அவர்கள் கூறி வருகின்றனர்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உட்கட்சி பூசலை தீர்க்க மல்லிகார்ஜுன கார்கே, ஹரீஷ் ராவத், ஜே.பி.அகர்வால் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், முதல்வர் அமரீந்தர், முன்னாள் அமைச்சர் சித்து, பல்வேறு அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து கருத்துகளை கேட்டறிந்தனர். இந்நிலையில் டெல்லியில் இக்குழுவினரை முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக சந்தித்து, நீண்ட நேரம் பேசினார். இந்நிலையில், “பஞ்சாப் முதல்வர் பதவியில் அமரீந்தர் சிங் நீடிப்பார். அதிருப்தியாளர்களின் குறைகளை போக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

57 secs ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

49 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

37 mins ago

மேலும்