விஜய் மல்லையா சொத்துகளை விற்க வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை வங்கிகள் விற்பனை செய்யலாம் என அந்நியச் செலாவணி சட்ட நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) அனுமதி அளித்துள்ளது.

சில ரியல் எஸ்டேட் சொத்துகள் மற்றும் பத்திரங்களை விற்பனை செய்து ரூ. 5,600 கோடி வரை திரட்டலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுனத்துக்கு அதிக கடன் தொகை அளித்த நிறுவனங்கள், கடனுக்கு ஈடாக வங்கிகளில் வைத்துள்ள சொத்துகளை விற்பனை செய்யலாம்.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார் விஜய் மல்லையா. 2019-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளியாக அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 65 வயதான விஜய் மல்லையா பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார். இதனால் சட்ட ரீதியாக தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சாதக அம்சங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். 2013-ம் ஆண்டு இவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் திவாலானது. இந்நிறுவனத்துக்காக வாங்கிய கடனை செலுத்தாமல் இவர் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்