மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஆயிரம் மருத்துவர்கள் ராஜினாமா

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை யில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள், அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் தங்களுக்கோ, தங்களது குடும்பத்தினருக்கோ வைரஸ் தொற்று ஏற்பட்டால் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று இளநிலை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கடந்த மே 6-ம் தேதி மாநில அரசு உறுதி அளித்ததாகவும், ஆனால், அந்த உறுதி மொழியை காப்பாற்றவில்லை என்றும் குற்றம்சாட்டி கடந்த 31-ம் தேதி முதல் இளநிலை மருத் துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வழக்கை மாநில உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது. ‘இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதம். அவர்கள் 24 மணி நேரத்தில் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையெனில் அவர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’ என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும் இள நிலை மருத்துவர்கள் சங்கத் துடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுவை நியமிக்கவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னின்று நடத் திய 468 இளநிலை மருத்துவர்களின் பணி நியமனத்தை ஜபல்பூர் மருத்துவ பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. அவர்கள் இறுதியாண்டு மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆவர். இதன்காரணமாக கடைசி ஆண்டு தேர்வை அவர்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த இளநிலை மருத்துவர்கள், தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 ஆயிரம் இள நிலை மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து இளநிலை மருத் துவர்கள் சங்கத்தின் தலைவர் அரவிந்த் மீனா கூறியதாவது:

ஊக்கத்தொகையை 24 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண் டும். கரோனா தொற்றால் பாதிக் கப்படும் மருத்துவர்கள், அவர் களின் குடும்பத்தினருக்கு தனி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். கிராமங்களில் ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை மாநில அரசிடம் முன்வைத்தோம்.

இவற்றை 24 நாட்களில் நிறைவேற்றுவதாக மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால், எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது கோரிக்கையை வலி யுறுத்தி வேலைநிறுத்தப் போராட் டத்தை தொடங்கினோம். இப்போது பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாங்கள் போராடவில்லை. வைரஸ் பரவல் குறைந்தபிறகே எங்களது கோரிக்கைகளை மீண்டும் முன் வைக்கிறோம். எங்களது பிரச் சினை தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6 முறை பேச்சுவார்த்தை

மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் விஷ்வாஸ் சராங் கூறியதாவது:

மத்தியப் பிரதேச உயர் நீதி மன்ற உத்தரவை இளநிலை மருத் துவர்கள் ஏற்றுக்கொள்ள வேண் டும். அவர்களுடன் இதுவரை 6 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள் ளேன். ஆனால், அரசின் அறி வுரையை அவர்கள் ஏற்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்கவில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது சட்ட விரோதம். அவர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் எஸ்மா சட்டத் தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்