கரோனா பரிசோதனை கருவிகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலுக்குத் தீர்வு காணும் விதமாக புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈடுபட்டுள்ளது. இது தவிர கரோனா பரிசோதனை கருவிகளை குறைந்த விலையில் தயாரிக்கும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நாடாப் புழுவுக்கு தீர்வாக அமைந்துள்ள மருந்தான நிக்லோஸ்மைடை, கரோனா வைரஸுக்கு தீர்வாக அமையுமா என்ற ஆராய்ச்சியில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனம் கரோனா பரிசோதனைக்காக ஆர்-கிரீன், ஆர்-கிரீன் புரோ என்ற கருவிகளைத் தயாரித்துள்ளது. இதற்குஇந்தியாவில் மருந்து கருவிகளுக்கு அனுமதி அளிக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர மிகக் குறைந்த விலையில் சானிடைஸர்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் இரண்டாவது அலை தீவிமடைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஜாம்நகரில் உள்ள ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பில் ரிலையன்ஸ் ஈடுபட்டது. இது தவிர முன்களப் பணியாளர்களுக்காக பாதுகாப்பு கவசங்களையும் கடந்த ஆண்டு தயாரித்து அளித்ததாக ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகேஷ் ஊதியம் பெறவில்லை

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த நிதி ஆண்டில் ஊதியம் எதையும் பெறவில்லை. கரோனா பரவல் காரணமாக தான் ஊதியம் எதையும் பெறவில்லை என அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில் அம்பானி கடந்தநிதி ஆண்டில் பெற்ற ஊதியம்பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதி ஆண்டில் அவர் தனக்கு ஊதியமாக ரூ.15 கோடி பெற்றுள்ளார். முந்தைய 11 ஆண்டுகளிலும் இதே போன்ற நடைமுறையைத்தான் அவர் பின்பற்றியுள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு ஊதியம், இதர சலுகைகள், கமிஷன் தொகை உள்ளிட்டவை சேர்த்து 2008-09-ம் நிதி ஆண்டிலிருந்து ரூ.15 கோடி அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமான தொகை ரூ.24 கோடி வரையாகும்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

54 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்