புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் சமூக ஊடகங்களில் அவதூறு பரவுவதை தடுக்கும்: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுவதைத் தடுக்கஉதவும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அதேசமயம் சமூக வலைதளங்களில் அப்பாவிகள் சிக்கி சீரழிவதுதடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பதிவில் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் அவதூறு கருத்துகள் பரவுவதைத் தடுப்பதற்காகவும் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள் தனிமனித சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக அமைந்துள்ளன என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதற்குபதிலளிக்கும் விதமாக அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில்தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

புதிய விதிமுறைகள் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சமூகவலைதளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தலைமை புகார்அதிகாரியை நியமிக்க வேண்டும்.அத்துடன் உபயோகிப்பாளரிடமிருந்து வரும் புகார்களை விசாரித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் எவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனையில் தகவல் பெறுபவர் இடையிலான பரிமாற்ற முறை தற்போது உடைக்கப்படுகிறது. இதன்படி பரிமாறிக் கொள்ளும் தகவல்களை நிறுவன அதிகாரி பார்க்க முடியும்.

இப்புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்ஸ்அப் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. தனிமனித கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்றும் அது தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் வாட்ஸ்அப் உபயோகிப்பாளர் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளார்.

வழக்கமாக தகவல்களை பரிமாறிக்கொள்பவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு துணை போகும் வகையில் தகவல்களை அனுப்புவோருக்குத்தான் பிரச்சினை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசின் செயல்பாடுகள் குறித்தவிமர்சனங்களை எப்போதும் வரவேற்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். அரசின் புதிய வழிகாட்டுதலுக்கேற்ப அதிகாரிகளை நியமிப்பதாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அரசிடம் தெரிவித்துள்ளன. ஆனால் ட்விட்டர் நிறுவனம் இதுதொடர்பாக தனது நிலைப்பாட்டை இன்னமும் தெரிவிக்கவில்லை.

இருந்தபோதிலும் தங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்துஅச்சப்படுவதாகவும், டூல்கிட் வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் டெல்லிமற்றும் குருகிராம் அலுவலகத்துக்கு சென்று நோட்டீஸ் வழங்கியது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

ஜோதிடம்

27 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

31 mins ago

சுற்றுலா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்