200 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 12630 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்

By செய்திப்பிரிவு

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம், இந்திய ரயில்வே, இதுவரை 775 டேங்கர்களில் 12630 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 200 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜனை பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 584 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 521 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3189 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 521 மெட்ரிக் டன், ஹரியாணாவிற்கு 1549 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 772 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 641 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 292 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 111 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 118 மெட்ரிக் டன், தில்லிக்கு சுமார் 3915 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்