பெங்களூரு தமிழ்ச்சங்கம் கடலூருக்கு நிவாரண உதவி: ரூ.10 லட்சம் பொருட்களை அனுப்பியது

By இரா.வினோத்

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தாமோதரன், 'தி இந்து'விடம் கூறியதாவது:

தமிழகத்தில் பெய்துவரும் வரலாறு காணாத மழையால் கடலூர் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. கடலூரில் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வ‌கையில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரை ரூ.10 லட்சம் மதிப்பிலான போர்வை, துண்டு, சேலை, மருந்து பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் உட்பட பல்வேறு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன..

இதனை இன்று மாலை (நேற்று) லாரி மூலம் கடலூருக்கு அனுப்பி வைத்தோம். பெங்களூருவில் இருந்து சென்ற 20 தன்னார்வ தொண்டர்கள் அந்த நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்