பிரணாபுக்கு சிறந்த உலகத் தலைவர் விருது

By பிடிஐ

குடியரசுத் தலைவர் மாளிகையில் மிகச்சிறந்த புதுமையான திட்டங்களை அமல்படுத்தியதற்காக பிரணாப் முகர்ஜிக்கு சிறந்த உலகத் தலைவர் விருது வழங்கப்பட்டது.

வெளிப்படையான புதிய திட்டங்களை செயல்படுத்தும் உலகத் தலைவர்களில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து கார்வுட் விருது வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யு.சி. பெர்க்லி ஹாஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் இந்த விருதை வழங்குகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கார்வுட் விருது பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. யு.சி. பெர்க்லி ஹாஸ் கல்வி நிறுவனத்தின் எரிசக்தித் துறை இயக்குநர் காத்தரின் உல்ப்ரம், டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் இந்த விருதை நேரில் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பிரணாப் முகர்ஜி பேசும்போது, “குடிமக்களுக்கு சேவையாற்றும் அரசுத் துறைகள் வெளிப்படையான புதுமையான திட்டங்களை அமல்படுத்துவது அவசியம். இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படுவதற்கு வழிகள் ஏற்படும். இந்த விருதை இந்திய மக்கள், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றுவோருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

பிரணாப் முகர்ஜி தனது மூன்றரை ஆண்டுகால குடியரசுத் தலைவர் பதவியில், குயரசுத் தலைவர் மாளிகை மற்றும் அது அமைந்துள்ள எஸ்டேட் முழுவதி லும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்