கர்நாடகாவில் ஒரே சமயத்தில் இரு சகோதரிகளை மணந்த இளைஞர் கைது

By இரா.வினோத்

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகேயுள்ள வேகமகடு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (30). இவர்கடந்த 7-ம் தேதி தனது சகோதரி மகேஸ்வரியின் மகள்கள் சுப்ரியா (19), லலிதா (16) ஆகியஇருவரையும் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, கோலார் மாவட்டகுழந்தைகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் இரு தரப்பையும் விசாரித்தார். திருமணமான இரு பெண்களின் பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்போது பெண்களின் தாயார் மகேஸ்வரி, ''எனது மூத்த மகள் சுப்ரியாவுக்கு பேசும் திறன் குறைபாடு உள்ளது. அவரை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை. நான் எனது சகோதரர் உமாபதியிடம் பேசி இருவரையும் திருமணம் செய்துகொள்ள வைத்தேன். தற்போது எனது இளைய மகளுக்கு 18 வயது நிறைவடையாததால் அவரை எனது வீட்டில் வைத்திருக்கிறேன்'' என்றார்.

இதையடுத்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி, மணமக்களின் பெற்றோர் மீது முல்பாகல் போலீஸில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீஸார், இந்து திருமண சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் உமாபதி, மணமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, உமாபதியை நேற்று கைது செய்தபோலீஸார், கோலார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால் கோலார்சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தை திருமணம் அதிகரிப்பு

இதுகுறித்து கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையதலைவர் அருட்தந்தை அந்தோனிசெபஸ்டியன் கூறும்போது, “ கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு எதிரானவன்முறையும், குற்றங்களும் அதிகரித்துள்ளன. இக்காலக்கட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் இந்த சூழலைபயன்படுத்தி, குழந்தை திருமணங்கள் ரகசியமாக நடத்தப்படுகின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

37 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்