பாதுகாப்பு கவச உடை, முகக் கவசங்கள் தயாரிப்பில் தன்னிறைவு பெற்றது இந்தியா

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், என் 95 முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

மத்திய அரசின் துரித நடவடிக்கைகளால் சில மாதங்களிலேயே பாதுகாப்பு கவச உடைகள், என் 95 முகக்கவச உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது. கடந்த டிசம்பர் மாத புள்ளிவிவரத்தின்படி, சர்வதேச அளவில் பாதுகாப்பு கவச உடைகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடி பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஒரு மாதத்துக்கு 3 கோடி என் 95 முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் என் 95 முகக்கவசங்களில் 30 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

29 mins ago

க்ரைம்

35 mins ago

க்ரைம்

44 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்