நாடாளுமன்ற துளிகள்: அரசு பணியில் சிறுபான்மையினருக்கு 9 %

By பிடிஐ

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:

பாஸ்போர்ட் மோசடி அதிகரிப்பு

உள் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு:

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டினரின் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களில் மோசடி நடந்திருப்பதாக 604 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் விசா மோசடி தொடர்பானது 137, ஆள்மாறாட்டம் தொடர்பானது 30 ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பதிவான 264 வழக்குகளைவிட அதிகம். இதுபோல இந்திய பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் மோசடி தொடர்பாக 720 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பாஸ்போர்ட் மோசடி தொடர்பானது 130, விசா மோசடி தொடர்பானது 63 ஆகும். எனினும் கடந்த ஆண்டின் 1,049 வழக்குகளைவிட இது குறைவு.

இந்திய வான்வெளியில் 32 முறை அத்துமீறல்

பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங்:

கடந்த 2013 ஜனவரி முதல் கடந்த நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த விமானங்கள் 32 முறை விதிகளை மீறி இந்திய வான் பகுதியில் பறந்துள்ளன. இதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

அடல் ஓய்வூதிய திட்டத்தில் 12.5 லட்சம் பேர்

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி:

அடல் ஓய்வூதியத் திட்டம் (ஏபிஒய்) அறிமுகம் செய்யப்பட்ட 6 மதங்களில், இத்திட்டத்தில் 12.5 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் போதுமான அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்வாவலம்பன் ஓய்வூதியத் திட்டம் அறிமுகமான ஓராண்டில் 3.01 லட்சம் பேர் மட்டுமே இணைந்தனர்.

வரி நிர்வாக உதவி சட்டத்தை திருத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு வெளிநாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் கருப்பு பணம் பதுக்கப்பட்டது தொடர்பான தகவலைப் பெறுவதற்கு இந்த சட்டத் திருத்தம் உதவும்.

58 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்

சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா:

நாடு முழுவதும் 58 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும். இதன்மூலம் 5,800 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு பணியில் சிறுபான்மையினருக்கு 9 %

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி:

கடந்த 2014-15 நிதியாண்டில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 11,218 பேருக்கு மத்திய அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த பணி நியமனத்தில் 8.79 சதவீதம் ஆகும். இது 2013-14-ல் 7.89 சதவீதமாகவும், 2012-13-ல் 6.9 சதவீதமாகவும் இருந்தது.

தரமான உணவுப்பொருள் கிடைக்க நடவடிக்கை

நுகர்வோர் விவாகரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்:

உணவு பாதுகாப்பு தரநிலையால் உறுதி செய்யப்பட்ட, பூச்சி தொற்று இல்லாத தரமான உணவுப்பொருட்கள் மட்டுமே பொது விநியோக திட்டத்தின் கீழ் (பிடிஎஸ்) வழங்கப்படுகின்றன. தரமற்ற உணவுப்பொருள் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மருந்து மூலப்பொருள் இறக்குமதி குறைக்கப்படும்

மருந்து மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர்:

மருந்து மூலப்பொருள்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது துரதிருஷ்டவசமானது. இறக்குமதியைக் குறைக்கும் வகையில் உள் நாட்டிலேயே மருந்து மூலப்பொருள்களை உற்பத்தி செய்ய 6 மெகா பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2 பழைய பூங்காக்களுக்கு புத்துயிரூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறார் குற்ற வழக்குகள் 50% உயர்வு

உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி:

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் புள்ளிவிவரப்படி கடந்த 10 ஆண்டுகளில் சிறார் குற்ற வழக்குகள் எண்ணிக்கை 50.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2005-ல் 25,601 ஆக இருந்த சிறார் குற்ற வழக்குகள், 2014-ல் 38,586 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

33 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

56 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்