கரோனா பரவலை கட்டுப்படுத்து குறித்து ஆலோசனை; தொகுதி மக்களுக்கு உதவுங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

By செய்திப்பிரிவு

‘‘கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும். அவரவர் தொகுதிகளில் உள்ளூர் அளவில் உள்ள பிரச்சினைகளை இனம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை மிக மோச மாக உள்ளது. கரோனாவால் தினமும் 3 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகளை விதித் துள்ளன.

இந்நிலையில், நாட்டில் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கிய பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். காணொலி் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கரோனா பரவல் நிலை, ஆக்சி ஜன் உற்பத்தி நிலவரம், தேவைப் படும் அளவு, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண் டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டன. மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்த 3-வது கட்டமாக இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுகுறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்குப் பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பவுல் விளக்கி கூறினார். கரோனா பரவலை கட்டுப் படுத்த, மத்திய அமைச்சர்கள் அவரவர் தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும். அதன்பின், மக்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும், உள்ளூர் அளவில் காணப்படும் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

‘‘நூற்றாண்டில் ஒரு முறை வரும் பேரிழவுபோல் கரோனா வைரஸ் உள்ளது. இது உலகுக்கே சவாலாக உள்ளது’’ என்று கூட்டத்தில் பங்கேற்ற அமைச் சர்கள் கருத்து தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள், மருந்து உற்பத்தி நிறுவன தலைவர்கள், மருத்துவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி உத்தரவுகள் பிறப்பித்து வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்